HOW TO TRAVEL IN TIME?
Chapter - 1 (Tamil & English)

நேரம் என் செல்லப்  பிள்ளை

(மூலம் இர்ஷாத் ஆலி)

சூரியன் தனது அன்றைய வேலையை முடித்து, கதிர்களை சுருக்கி கொண்டு இருந்த அதே சமயம், நிலவு தனது வேலையை தொடங்க ஆயத்தமாகி கொண்டு இருந்தது. மெதுவாக நிலவின் ஒளி அடர்த்தி அதிகமாக, ஹாலோஜென் விளக்குகளும், LED விளக்குகளும், சோலார் விளக்குகளும், வாகனங்களின் ஒளி விளக்குகளும் அந்த நகரத்தை பல வண்ணங்களில் ஜொலிக்க செய்து கொண்டு இருந்தது. 

இந்த நவீன உலகத்தில் யாரும் எதற்காகவும் காத்துகொண்டு இருக்க விரும்புவது இல்லை. அறிவியலும், தொழில்நுட்பமும் வளர வளர நீண்ட வரிசையில் காத்துகொண்டு இருக்கும் காலம் எல்லாம் மலை ஏறி விட்டது. இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லாவற்றையும் இணையத்தளத்திலே வாங்கிக்கொள்ள முடிகிறது. இத்தகைய வளர்ச்சி இருந்தும் மனிதன் ஒன்றுக்கு மட்டும் வரிசையில் காத்து இருக்க சிரமப்படுவது இல்லை. அது தான் மாலை நேர மருத்துவமனைகள்(கிளினிக்). இந்த கிளினிக்க்குகளை நாம் அனைத்து தெருக்களிலும் பார்க்க முடிகிறது. சிறு கைகுழந்தையிலிருந்து வயதான பெரியவர்கள் வரை அனைவரையும் அந்த கிளினிக்க்குகளில் பார்க்கலாம். 

அது ஒரு தனியார் மாலை நேர மனோதத்துவ மருத்துவமனை. அனைத்து கிளினிக்க்குகளை போல் LED தொலைக்காட்சி, நாளிதழ்களும், மருத்துவ மாதஇதழ்களும் நிரம்பிய மேஜை, சுவரெல்லாம் மருத்துவ குறிப்புக்கள் நிறைந்த சுவரொட்டிகள் என்று அந்த கிளினிக் நாம் அடிக்கடி பார்க்கும் மாலை நேர கிளினிக்க்குகளை நினைவுபடுத்தியது. வாசல் தாண்டி இடது ஓரத்தில் ஒரு வரவேற்பறை. அதில் 22 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் அங்கு வந்து இருக்கும் கூட்டத்தை சீர்படுத்தி கொண்டு இருந்தாள். அனைவர் கேட்கும் கேள்விக்கும் சளைக்காமல் சிரித்த முகத்துடன் பதிலளித்து கொண்டுயிருந்தாள். 

மருத்துவர் இர்ஷாத் அந்த நகரத்தின் தலை சிறந்த மனோதத்துவ மருத்துவர்களில் மிக முக்கியமானவர். MBBS முடித்துவிட்டு நரம்பியல் சம்மந்தமான படிப்பை தேர்ந்தெடுத்து படித்தார். பின் அமெரிக்காவிலுள்ள சைப்ரஸ் நரம்பியல் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் மற்றும் மரபணு தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் பெற்றார். காலையில் அரசு மருத்துவராக பனி புரிந்து கொண்டு மாலையில் சொந்தமாக கிளினிக் வைத்து மனோதத்துவ பிரச்சனைகளை அவர்க்கு உரித்தான வகையில் குணப்படுத்தி கொண்டு இருந்தார். 

அன்று அந்த மருத்துவமனையில் சராசரி கூட்டமே காணப்பட்டது. இருபது நோயாளிகள் வரிசையில் காத்து கொண்டு இருந்தார்கள். அப்பொழுது அங்கு இருபத்தியொன்றாம் நோயாளியாக ஒரு இளம் தம்பதி மருத்துவமனைக்குள் நுழைந்தார்கள். ஆணுக்கு 30 வயது இருக்கலாம், பெண்ணிற்கு 26 வயது இருக்கலாம். அவர்கள் நேராக வரவேற்பறை நோக்கி அணுகினார்கள். வரவேற்பாளர் பெண் இவர்களை பார்த்த உடன் ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டிய படியே கேட்டாள், 

"முன்பதிவு பண்ணி இருக்கீங்களா" 

"நாங்க இன்னைக்கு தான் மொதோ தடவ வரோம். முன்பதிவு பண்ணல." என்று அந்த மனைவி பதிலளித்தாள். 

அந்த ஆண் எதுவும் பேசவில்லை. அவன் கண்கள் ஓரிடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தது. இதை கவனித்த வரவேற்பாளர் அந்த ஆணுக்கு ஏதோ பிரச்னை இருக்குறது என்பதை புரிந்து கொண்டாள். 

"ஏங்க... எவ்ளோ நேரம் காத்து இருக்கனும்", என்று மனைவி கேக்க. 

"ஏற்கனவே இருபது நோயாளிகள் காத்துட்டு இருக்காங்க. தயவு செஞ்சு நீங்களும் காத்து இருங்க. உங்க முறை வரும் பொது சொல்றேன்." என்று வரவேற்பாளர் சிறிது கொண்டே பதிலளித்தார். 


ஏமாற்றத்துடன் அந்த தம்பதி அங்கு இருக்கும் நாற்காலி வரிசையில் ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்தார்கள். அந்த மனைவி மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டால். தனது கணவனை பார்த்து அடிக்கடி ஏதோ கூறி கொண்டும், அதை அவன் பொருட்படுத்தாமல் பதட்டத்துடன் அமர்ந்து இருந்தான். அவன் கண்கள் அலைவது நிற்கவே இல்லை. அவ்வப்போது அந்த பெண் தான் கண்களில் இருந்து வழியும் நீரை கைக்குட்டையால் துடைத்து கொண்டு இருந்தாள். 


கூட்டம் மெது மெதுவாக குறைந்து கொண்டு இருக்க, இர்ஷாத் அன்றைய இருபதாவது நோயாளியை கவனித்து கொண்டு இருந்தார். பதினாறு வயது நிரம்பிய பெண் மற்றும் அவள் தாய் முன்னாள் அமர்ந்து கொண்டு இருக்க, இர்ஷாத் அந்த சிறுமியின் கண்களை உற்று நோக்கி கொண்டு இருந்தார். 


--------- தொடரும்

HOW TO TRAVEL IN TIME

By Irshad Ali

             The Sun was winding up his job and the moon was entering into its shift. The Sun was slowly fading towards the other side of the world by shrinking its large hands of rays. Now the moon was slowly increasing the brightness from lower intensity to higher intensity. Halogen lamps, LEDs, Solar lamps, headlights of vehicles were filled over the city and welcomed that night with colorful bouquet.

            In this modern world, nowadays no one is waiting for anything. As technology improves, standing or waiting in a queue is a very rare process. We can get everything through online. But still one place is there where people do not lose their interest in waiting. Evening time Clinics is that place. You can see evening time clinics in every streets. You can see all kinds of people there from children to old people.

        That was a typical evening time clinic with decorative lights, a LCD TV, a table with newspapers and medical magazines. It’s a psychiatric clinic with a reception at the entrance. A girl was sitting in the reception and she was controlling the environment. That was not a crowded day though there were 20 patients in queue and half of them had already got their appointments. In spite of that, they had to wait for their turn. Dr. Irshad is one of the best psychiatrists in that city. After his MBBS, he did specialization course in Neurology. After that he did a specialization course in Neurology and Genetics in Cyprus Institute of Neurology and Genetics, US.

            The twenty first patient was entering into the hospital. He is a young man of age 30 years, in semi-formals, formal shoes, a fast track watch, which shows that he is a high middle class corporate employee. He came with his wife. She is a good looking skinny lady with lavender color salwar. She must be 26 or 27 years of age. She has got attractive eyes and we can easily find that they are newly married couple. They were heading towards the reception where the receptionist girl was sitting and controlling. She is a typical receptionist with kajal eyes, sharp voice and especially unmarried. She was busy with re-arranging the bills and noting down the entries. Once she saw the couple, she took her pen and started writing down in a paper.

            “Name please Sir?

The guy did not speak. The lady started to speak.

            “Sekar. Full name is Sekar Subramaniam.”

            “Do you have an appointment?”

            “No. This is the first time we have come here.”

The receptionist filled all the details that she wanted and asked them to wait in the waiting hall.

            “How long will it take?”

            “There are 20 patients waiting in the queue. Please wait.”

             The couple left that place with disappointment and occupied the corner chairs in the hall. The guy was so silent but his eyes were rolling here and there in tension. The lady fixed her eyes in that big LCD TV screen. Meantime she watched her husband’s situation and wiping her tears with a handkerchief. She spoke something with him and she disappointed by his answer. She seemed to be worried a lot. The crowd started to move slowly.

            Dr. Irshad was examining the 20th patient. He is a young psychiatrist of age 35 years with a small spectacles on his nose. He does not speak a lot, but he listens a lot. He was listening to a lady who was explaining about her daughter sitting beside. After listening, the doctor finally started to speak.





Comments