நீர்நிலை எண்ணெய்க்கசிவை சுத்தப்படுத்த ஒரு எளியவழி
நீர்நிலைகளில் எண்ணெய்க் கசிவு என்பது சமீபகாலங்களில் அதிகரித்து வருகின்றன. நீர்வாழ் உயிரினங்கள் மட்டுமல்லாமல் அவற்றை சார்ந்திருக்கும் உயிரினங்கள் அனைத்துமே பாதிப்புக்குள்ளாகின்றன. ஆதலால், எண்ணெயை மட்டும் துரிதமாக உறிஞ்சி நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் ஆராய்ச்சிகள் உலகெங்கும் தொடர்கின்றன.
கடந்தமாதம் திருவனந்தபுரத்தில் சுரேஷன் அவர்களின் தலைமையிலான ஆய்வுக்குழுவில் உள்ள அண்ணாமலை, ஒருபக்கம் நீரை ஈர்க்கக்கூடிய மறுபக்கம் எண்ணெய் மூலக்கூற்றை ஈர்க்கக்கூடிய 1,2:5,6-டை-ஓ-சைக்ளோஹெக்ஸைலிதீன் மேனிட்டால் எனும் வேதிப்பொருளை இயற்கையில் கிடைக்கும் தாவர இழையோடு சேர்த்து எண்ணெய் உறிஞ்சும் பஞ்சுப் போன்ற பொருளை உருவாக்கியுள்ளார்.
இந்த வேதிப்பொருளை தயாரிப்பதும் மிக எளிய வழிமுறையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
How to remove Oil Spill from water?
Reference: Annamalai Prathap & Prof. Dr. K. M. Sureshan
School of Chemistry,
Indian Institute of Science Education and Research,
Thiruvananthapuram, Kerala-695 016 (India).
Acknowledgement: TamilChemist, Ariviyal-Solai Innovation Centre (AiC)
Comments
Post a Comment
Thank for your Valuable Comments