நேரம் என் செல்ல பிள்ளை
(By மூலம் இர்ஷாத் அலி)
டாக்டர் இர்ஷாத் அன்றைய இருபதாவது நோயாளியாக வந்த அந்த சிறுமியின் கண்களை உற்று நோக்கி கொண்டிருந்தான், அந்த சிறுமியின் தாய் கூறியதை ஒரு பக்கம் கேட்டுக்கொண்டே, பிரச்னைக்குரிய மூலக்கருவை அந்த சிறுமியின் கண்களில் தேடி கொண்டிருந்தான். பொதுவாக மனோதத்துவ குறைபாடுகளை கண்கள் தெளிவாக காட்டி விடும். நம்மை போல சராசரி மனிதர்களுக்கு அது சற்று புரிவது கடினம். ஆனால் இர்ஷாத் போன்ற மனோதத்துவ மருத்துவர்களுக்கு இது எளிதாக புரிய வாய்ப்புண்டு. கண்களை வைத்தே அவர்களின் பிரச்சனையின் தாக்கத்தை கண்டுவிடுவார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற நம் முன்னோர்களின் கூற்றை இந்த கால மனோதத்துவ அறிவியலும் ஆமோதிக்கின்றது.
இர்ஷாத் அந்த சிறுமியின் தாயின் பக்கம் திரும்பி,
"சமீபத்துல இவள் ஏதாவது பிரச்சனையில் இருந்த மாதிரி தோணுச்சா? "
"இல்லை டாக்டர். நல்லா படிக்குற பொண்ணு. எந்த பிரச்னையும் அவளுக்கு இல்லை. ஆனா கடந்த ஒரு மாசமா இவளோட செய்கைகள் எங்களை ரொம்ப பதற வச்சுருச்சு", என்று கூறி அந்த சிறுமியின் தாய் கண்களில் வழிந்த நீரை கைக்குட்டையால் துடைத்துக்கொண்டாள்.
"இவள் எத்தனை முறை தற்கொலைக்கு முயற்சி செய்தாள்??"
"இன்னைக்கு நடந்ததையும் சேர்த்து நான்கு முறை", என்று கூறி மீண்டும் கண்களின் நீரை துடைத்துக்கொண்டாள்.
இர்ஷாத் தனது காகிதத்தில் எதையோ குறித்துக்கொண்டு பேச தொடங்கினார்.
"நீங்க கொஞ்ச நேரம் இங்கே இருங்க. நான் இவளை கொஞ்சம் டெஸ்ட் பண்ணனும்" என்று கூறி அந்த சிறுமியை அங்கு இருந்த பரிசோதனை அறைக்கு அழைத்து சென்றார்.
சரியாக இருபது நிமிடங்கள் கழித்து அந்த சிறுமியை அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளிய வந்தார். சிறுமியின் தாய் பதட்டம், ஆர்வம் கலந்த பார்வையுடன் இர்ஷாத் -ஐ பார்க்க, டாக்டர் இர்ஷாத் சிறிய புன்னகையுடன் பேச தொடங்கினார்.
"இனி ஒன்னும் பிரச்னை இல்லை. உங்க பொண்ண இப்போ நீங்க தாராளமா கூட்டிட்டு போகலாம். இனி இந்த மாதிரி எதுவும் நடக்காது. ஆனா தவறாம இந்த மருந்தை அவங்க 3 மாசம் சாப்பிடணும். நம்பிக்கையோட போங்க. 3 மாசம் கழிச்சு வந்து என்னை பாருங்க"
"டாக்டர், என்ன பிரச்சனைன்னு கொஞ்சம் புரியுற மாதிரி சொல்ல முடியுமா. இவள் ஏன் தற்கொலை பண்ண முயற்சி செய்தாள். எனக்கு ஒண்ணுமே புரியல டாக்டர்."
என்று அந்த தாய் ஆர்வத்துடன் கேட்க, டாக்டர் தனது மூக்கு கண்ணாடியை கழட்டி மேஜை மீது வைத்துவிட்டு பேச தொடங்கினார்.
"பொதுவா நம் மூளைல ரெண்டு விதமான உள்ளுணர்வுகள் இருக்கு. அதை நாங்க மனோதத்துவ அறிவியல்-ல கான்சஸியஸ் (conscious) உள்ளுணர்வு, சப் -கான்சஸியஸ் (sub-conscious) உள்ளுணர்வு-னு சொல்லுவோம். இதுல நம்மளோட சராசரி உணர்வுகளான சாப்பாடு ஆசை, இனக்கவர்ச்சி, புகழ் ஆசை, வாழ்வதற்கான ஆசை இதெல்லாம் அந்த கான்சஸியஸ் உள்ளுணர்வு சார்ந்தது. ஆனால், இந்த சப் - கான்சஸியஸ் உள்ளுணர்வு எப்பொழுதும் மரணத்தின் ஆசை கொண்டது. மரணத்தை எதிர் பார்த்துக்கொண்டே இருக்கும்."
அந்த தாய் கண் கொட்டாமல் கேட்டு கொண்டே இருக்க, இர்ஷாத் மீண்டும் தொடர்ந்தார்.
"ஆனால், இந்த சப் - கான்சஸியஸ் உள்ளுணர்வு நமக்கு எப்போவும் தெரிறது இல்ல. அந்த மரண ஆசை நம்ம மனசுல ஆழத்துல தங்கிடுது. சில சமயத்துல இது கான்சஸியஸ் உள்ளுணர்வு தாண்டி வரும். ரொம்ப மன கஷ்டத்துல இருந்தாலோ, அளவுக்கு அதிகமா பயத்துல இருந்தாலோ, இந்த மரண ஆசை கான்சஸியஸ் உள்ளுணர்வு தாண்டி வெளியே வந்துரும். அந்த மாதிரி நேரத்துல தான் தற்கொலை முயற்சி எல்லாம் பண்றோம்."
"என் பொண்ணுக்கு எந்த பிரச்னையும் இல்லையே...." என்று பதற்றத்துடன் அந்த தாய் கூற, இர்ஷாத் மீண்டும் தொடர்ந்தார்.
"உங்க பொண்ணுக்கு எந்த பிரச்னையும் இல்ல. அவள் மூலையில் ஏற்பட்ட சில மாறுதல்கள் காரணமா அவள் சப் - கான்சஸியஸ் உள்ளுணர்வு, வெளியே வந்து இருக்கு. அதை சரி பண்ண சில சைகடெலிக் (psychedelic) மருந்து கொடுத்து இருக்கேன். தவறாம கொடுங்க. எல்லாம் சரி ஆயிடும்," என்று கூறி புன்னகைத்தார்.
"ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் " என்று மகிழ்ச்சியுடன் அந்த சிறுமியை அழைத்து கொண்டு நம்பிக்கையோடு டாக்டர் அறையை விட்டு வெளியே சென்றார்.
அந்த வரவேற்பாளர் பெண் மெதுவாக டாக்டர் அறைக்குள் நுழைந்து,
"சார், லாஸ்ட் பேஷண்ட், சேகர் சுப்ரமணியம். புது என்ட்ரி."
டாக்டர் இர்ஷாத் உள்ளே வர சொல்லும்படி தலை அசைத்தார். சேகர், அவன் மனைவி இருவரும் அறைக்குள் நுழைந்தார்கள்.
சேகரின் கண்கள் ஓய்வில்லாம் அலைந்துக்கொண்டே இருந்தது. அவனின் பார்வை கொண்டு, இவன் தான் நோயாளி என்று இர்ஷாத் புரிந்துக்கொண்டார். ஆனால் இந்த இருபத்தி ஒன்றாம் நோயாளி சேகர் தன்னை பிரமிக்க வைக்க போகிறான் என்று அப்பொழுது இர்ஷாத் க்கு புரியவில்லை.
--- தொடரும்.....
HOW TO TRAVEL IN TIME
(By Irshad Ali)
Dr. Irshad was
examining the 20th patient. He is a young psychiatrist of age
35 years with a small spectacles on his nose. He does not speak a lot, but he
listens a lot. He was listening to a lady who was explaining about her daughter
sitting beside. After listening, the doctor finally started to speak.
“Was there any incidents which affected her recently?”
“No doctor. Nothing. She is doing well in her school, no
personal problems also. I am really worried by the way she has been behaving in
the past one month.”
“How
many times did she attempt suicide?”
“Six
times including today’s”
The doctor noted down something and started to speak again.
“Can you please wait here?”
The mother nodded her head in surprise. The doctor took that
girl into a room for investigation and they came back after 20 mins. The mother
was looking at the doctor with eagerness. The doctor removed his specs and
started to speak.
“Nothing
to worry. This can be cured.”
“What
is the problem doctor. We are really worried by her activities. Will she
attempt again?”
“Don’t
worry. I will give her some medicines. Give it to her in time without delay.
Everything will be alright.”
“May
I know the reason?”
“Thats
nothing to worry about. You have brought her to me in time. So it can be easily
cured.”
The doctor wore his specs and continued again.
“There
are two instincts in our brain always. Conscious instinct and sub-conscious
instinct. The conscious instincts are love to eat, love to live, love to sex
etc. But this sub-conscious instinct is always loving to die. Its gets
attracted towards death. This conscious instincts are always overcome the
sub-conscious instinct. Due to this we are behaving normal always. Hence, the
desire to death is left deeper into the brain. But, sometimes it overcomes the
conscious instincts. At that time we do attempt for suicide. Due to some
abnormal reactions in her brain, it has come out. But no problem. I have given her
some psychedelic drugs. Everything will be fine. Come and visit me agian after
15 days.”
“Thank
you so much doctor.”
The mother left the room with her daughter with 100% confidence.
The receptionist came in.
“Doctor.
Last patient. Sekar Subramaniam. New entry.”
The doctor nodded his head to call them.
The doctor waved his hands to that young couple to be seated.
The doctor looked at them for a while and then he realised that the lady was
too worried by her husband’s condition. The doctor looked at that guy. His eyes
were moving here and there and it never stopped. The doctor was not able to
realize this 21st patient was going to surprise him.
Comments
Post a Comment
Thank for your Valuable Comments